மேஷம்: உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
ரிஷபம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகன வசதிப் பெருகும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
மிதுனம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்தியோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். கனவு நனவாகும் நாள்.
கடகம்: எதிர்ப்புகள் அடங்கும். பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்கள் வருகையால் வீடு களைக் கட்டும். அரசால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள்.
கன்னி: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
துலாம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
விருச்சிகம்: எடுத்த வேலையை முடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாவீர்கள். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.
தனுசு: எதிலும் வெற்றி பெறுவீர்கள். சொந்த பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள் உத்தியோகத்தில் உங்களுக்கு புது பொறுப்புகளை ஏற்பீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.
மகரம்: உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். வியாபாரிகள் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.
கும்பம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். அலுவலகத்தில் மரியாதை கூடும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.
மீனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும் அலைச்சலும் இருக்கும். பேச்சில் காரம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். கவனமுடன் இருக்க வேண்டிய நாள்.