நேற்று கட்டுப்பாடுகளின்றி பெருந்தொகையானவர்கள், உணவகங்களின் வெளிப்புறத்திலும், அருந்தகங்களிலும் வெளிப்புறத்திலும் கூட்டம் கூட்டமாகக் குழுமியிருந்தவை ஆபத்தாக முடியுமா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
«நேற்று அனைத்தும் மீளத் திறக்கப்பட்டது. உங்களின் பேரவா என்னால் புரிந்து கொள்ளமுடிகின்றது. ஆனாலும் அனைவரினதும் பாதகாப்பிற்காகவும், அனைத்து மக்களும் கூட்டாக கடுமையான ஒழுக்கத்தைப் பேணவேண்டும்»
என Blois (Loir-et-Cher) விற்குச் சென்றிருந்த பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ் தெரிவித்துள்ளார்.
அதே நேரம், «சுகாதாரக் கட்டுப்பாடுகள் உணவகங்களிற்கும் அருந்தகங்களிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. தொழில்முறை ரீதியில் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் பேணவேண்டும். மக்களும் இதனை அனைவரின் நன்மைக்காவும் கடைப்பிக்கவேண்டும்» எனவும் பிரதமர் அறிவுறுத்தி உள்ளார்.