நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான சூழலில் முக்கிய தீர்மானங்கள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தவிர்ந்த அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.
“பிரதமர் தொடர்ந்து செயல்படுவார், மற்ற அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளனர்,” என உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.