அனுராதபுரத்தில் (Anuradhapura) 13 வயதான தேரர் ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் மற்றுமொரு தேரர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் அனுராதபுர நகரில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்த 22 வயதான தேரர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பதின்ம வயது தேரர் தனிப்பட்ட தேவைக்காக விகாரைக்கு சென்ற வேளையில் தகாத செயற்பாடு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட தேரர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்தநிலையில், கைது செய்யப்பட்ட தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.