தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க பயணித்த மகிழுந்து மீது முட்டை தாக்குதலை மேற்கொண்டவர்களை எவன்கார்ட் நிறுவனமே வழிநடத்தியுள்ளதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள சநதேகநபர்கள் இருவரும், எவன்கார்ட் நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் என ஜே.வி.பியின் பிரசார செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்தேகநபர்கள் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதேநேரம், அவர்களிடம் மேலதிகமாக வாக்குமூலம் பெறுவதற்கு வைத்தியசாலையினூடாக இன்னும் அனுமதி வழங்கப்படவில்லையென நிட்டம்புவ காவற்துறையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இந்த செய்தி உள்ளிட்ட கொழும்பு தொலைக்காட்சி ஊடகங்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பை இங்கு காணலாம்.