அநுராதபுரத்தில் இடம் பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
ஹொரவ்பொத்தான, கெப்பித்திகொல்லாவ பிரதான வீதி கிவுளேகட பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கெப்பித்திகொள்ளாவ பகுதியிலிருந்து கார் ஒன்று ஹொரவ்பொத்தான நோக்கி வந்து கொண்டிருந்த போது வீதியிலிருந்த மாட்டுடன் மோதி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது காரில் பயணித்த மூவரில் ஒருவர் ஹொரவ்பொத்தான வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்றைய இருவரும் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் தொடர்பில் தெரிய வந்தவை
இந்த விபத்தில் ஹொரவ்பொத்தான, மரதன்கடவல பகுதியை சேர்ந்த முனசிங்ககே ரோமின்த மதுபாசன (22 வயது ) மற்றும் ஹொரவ்பொத்தான நிக்கவெவ சந்தியில் வசித்து வரும் ரன்னஹென்னகே சதறு பிரபாஷன (19 வயது) ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த விபத்தில் படுகாயமடைந்த 30 வயதுடைய நபர் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.