முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2 நாட்களாக சுயநினைவிழத்த நிலையில் கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்ந்தும் அபாயகரமான கட்டத்திலேயே உள்ளதாக கூறப்படுகின்றது.
நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட பின்னராக கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையில் சிவாஜிலிங்கம் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.