இலங்கையில் ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்பட்ட வரலாறே தற்போது காணப்படுவதாகவும்,நிறைவேற்று அதிகாரம் உள்ளவரை அமைச்சு பதவியென்பது ஒரு வலுவற்ற பதவியென்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும் என மாணவர்கள் சிலர் தமது காரசாரமான கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
யாழ்.இந்துக்கல்லூரி மண்டபத்தில் யாழ்.இந்துக்கல்லூரிக்கும், கொழும்பு இந்துக்கல்லூரிக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற சொல்லாடல் நிகழ்ச்சி கலந்துக்கொண்டு மாணவர்கள் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு பல கருத்துக்களை முன்வைத்து பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளனர்.
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தமிழ் தலைமைகள் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டுமா அல்லது இதுவரை ஆளும் கட்சியுடன் இணைந்து அமைச்சு பதவிகளை வகித்த தமிழ் தலைமைகள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள் என்பதை தெளிவாகவும்,எதிர்கால அரசியல் தொடர்பிலும் விளக்கமளித்துள்ளனர்.
இது தொடர்பில் அந்த மாணவர்கள் பல கருத்துக்களை முன்வைத்த காணொளி பின்வருமாறு,