அட்டன் கல்வி வலயம் நோர்வூட் தேசிய பாடசாலையில் பொறியியல் தொழில்நுட்ப பிரிவு மாணவன் புதிய கண்டுபிடிப்பிலான தகவல் வெளியாகி உள்ளது.
எஸ்.கிரிஸான் என்ற மாணவன் தொழில்நுட்பவியல் பீடத்திற்கான பச்சை இல்லத்தில் தாவரத்தின் வளர்ச்சியை கண்காணிக்கவும் பச்சை இல்லத்தில் உள்ள ஈரப்பதன் வெப்பநிலை தொடர்பிலான விடயங்களை கண்டுபிடித்துள்ளார்.
அத்தோடு தன்னியக்கமாக கண்காணித்து இல்லத்திற்கான அனைத்து பரமானங்களையும் தன்னியக்கமாக கட்டுப்படுத்தக்கூடிய IOT முறைமையினாலான செய்நிரல் ஒன்று உருவாக்கப்பட்டு இணையத்தின் ஊடாக கட்டுப்படுத்தக் கூடிய வசதிகளுடன் கூடிய முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்பட்டு பச்சை இல்லத்தில் (Green House) பொருத்தப்பட்டுள்ளது.