பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை வென்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.
திடீரென நிறைய படங்களில் கமல் கமிட்டாகி இருப்பதால் ஷோவில் இருந்து திடீரென விலகவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த செய்தியை பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆண்டவராக விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டார். இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 8-ன் 3 ஆவது வாரம் சென்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கான போட்டிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ஒருவழியாக பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சௌந்தர்யா வாய் திறந்து விட்டார். பிக்பாஸ் விளையாட்டின் ஆழத்தை புரிந்து கொண்டார் என ரசிகர்கள் குஷியில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அதே சமயம், இந்தி பிக்பாஸ் சென்ற நடிகை ஸ்ருதிகா மக்களையும், அங்குள்ள போட்டியாளர்களையும் சுவாரஸ்யப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
நேற்றைய தினம் முக்கிய போட்டியாளராக மக்கள் கொண்டாடும் ஆர்.ஜே. ஆனந்தி கெட்ட வார்த்தை பேசி, மோசமாக சைகைகளை கொடுத்திருக்கிறார். இதனால் பார்வையாளர்கள் உச்சக்கட்ட கடுப்பில் இருக்கிறார்கள்.
இந்த வாரம் விஜய் சேதுபதி, ஆனந்திக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும். “ இப்படியொரு ஆண் போட்டியாளர் செய்திருந்தால் ஏற்றுக் கொள்வீர்களா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.