எதிர்வரும் அடுத்த வருடத்தில் பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
நேற்று (07) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இதில் எந்தவித அடிப்படையும் இல்லை இது உண்மைக்கு புறம்பான கூற்று என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.