நமது பூமியின் துணைக் செயற்கோள் என்று அழைக்கப்படும் நிலவானது அடுத்த வாரம் ஒரு அரிய நிகழ்வால் ஸ்ட்ராபெரி மூன் ஆக காட்சியளிக்கப் போகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு ஏற்படும் மாற்றத்தை ஹனி-மூன் என்று அழைக்கிறார்கள். பெரிய நிலவுகள் முழு நிலவை உள்ளடக்கிய முதல் காலாண்டு முதல் மூன்றாம் காலாண்டு வரையிலான கட்டங்களில் நடைபெறுகின்றன. இருப்பினும், நாம் பார்க்கப்போகும் அடுத்த முழு நிலவு ஒரு குறிப்பிட்ட காட்சியாக இருக்கும்; காரணம் இது ஒரு ஃபுல் ஸ்ட்ராபெரி சூப்பர்மூன் நிகழ்வை உருவாக்கப் போகிறதாம்.
சந்திரனின் சுற்றுப்பாதை பூமிக்கு மிக அருகில் இருக்கும் அதே நேரத்தில் சந்திரன் நிரம்பியிருக்கும் போது சூப்பர் மூன் நிகழ்வு ஏற்படுகிறது. இந்த நிகழ்வானது வழக்கத்தை விட பெரியதாகவும் பிரகாசமாகவும் தோன்றி காட்சியளிக்கிறது.
பூமிக்கு சந்திரனின் மிக நெருக்கமான புள்ளி பெரிஜி என்று அழைக்கப்படுகிறது. இது பூமியிலிருந்து சராசரியாக 226,000 மைல்கள் (363,300 கிலோமீட்டர்கள்) தொலைவில் உள்ளது.
நாம் பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் 12 அல்லது 13 முழு நிலவுகளைப் பார்க்கிறோம். ஆனால் சந்திரனின் சுற்றுப்பாதையின் நோக்கு நிலை காரணமாக, ஒவ்வொரு முழு நிலவும் ஒரு சூப்பர் மூன் அல்ல. அந்த வகையில், ஸ்ட்ராபெரி ஃபுல் மூன் நிகழ்வு வரும் ஜூன் 14 ஆம் திகதி அன்று, இந்திய நேரப்படி மாலை 5:22 மணிக்கு உச்சத்தை எட்டும் எனவும் கூறப்படுகின்றது.