சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் விஜயலட்சுமி, சத்தியமங்கலம் வனப்பகுதியில், புதையல் இருப்பது உண்மை தான் என்று கூறியுள்ளார்.
வீரப்பனின் மகள் விஜயலட்சுமி, மாவீரன் பிள்ளை என்ற திரைப்படத்தில், நடித்துள்ளார். முதல் முறையாக நடித்துள்ள நிலையில், இந்த திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாகியுள்ளது.
இப்படத்தை, கே.என்.ஆர். ராஜா என்பவர் தயாரித்து இயக்கியுள்ளார். இந்நிலையில், அவரும், திரைப்படத்தின் நாயகி விஜயலட்சுமியும் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது விஜயலட்சுமி கூறுகையில், உதவும் குணம் கொண்ட வழக்கறிஞராக திரைப்படத்தில் நடித்திருப்பதாகவும், நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.
மேலும் தனது தந்தை குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், எங்க அப்பா வாழ்ந்து வந்த அ வனப்பகுதியில் பணப் புதையல் இருப்பது உண்மைதான் என்று கூறினார்.