நவகிரகங்களில் ராகு, கேது ஆகிய இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்களாகும். இவ்விரு கிரகங்களும் எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிக்கும்.
இந்த இரண்டு கிரகங்களும் ராசியை மாற்றுவதற்கு 18 மாதங்கள் ஆகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சிக்கு அடுத்தப்படியாக ஒருவரது வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பெயர்ச்சி என்றால் அது ராகு கேது பெயர்ச்சி தான்.
2023 ஆம் ஆண்டின் ராகு கேது பெயர்ச்சியானது அக்டோபர் 30 ஆம் தேதி நிகழவுள்ளது. அதில் ராகு மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் செல்லவிருக்கின்றனர்.
இந்த கிரகங்களின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அதுவும் இந்த ராகு, கேது பெயர்ச்சியால் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசிக்கப் போகிறது. அதுவும் திடீர் பண வரவு கிடைக்கவுள்ளது.
இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 12 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். அதேப் போல் கேது 6 ஆவது வீட்டிற்கு செல்கிறார்.
இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 30 முதல் அற்புதமாக இருக்கப் போகிறது. நிறைய பணத்தை சேமிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
நீண்ட காலமாக கைக்கு வராமல் சிக்கியிருந்த பணம், ராகு கேது பெயர்ச்சிக்கு பின் கைக்கு வந்து சேரும்.
நிலுவையில் உள்ள முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக மீண்டும் நடக்கும். ஆனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
ரிஷபம்
ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். அதே சமயம் கேது 5 ஆவது வீட்டிற்கு செல்கிறார்.
இதனால் இந்த ராகு கேது பெயர்ச்சியானது ஏராளமான நன்மைகளைத் தரப் போகிறது. குறிப்பாக வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத பணத்தைப் பெற வாய்ப்புள்ளது.
வீட்டு சூழல் மற்றும் அலுவலக சூழல் நன்றாக இருக்கும். முக்கியமாக கேதுவின் ஆதரவு கிடைப்பதால், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு எப்போதும் இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டிற்கு ராகு செல்கிறார். அதேப் போல் கேது 4 ஆவது வீட்டிற்கு செல்கிறார்.
இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அக்டோபர் 30 முதல் பிரகாசிக்கப் போகிறது.
ஜோதிடம், ஆன்மீகம், எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு இனிமேல் அற்புதமாக இருக்கப் போகிறது.
வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கப் போகிறது.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், ராகு கேது பெயர்ச்சிக்கு பின் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.