இலங்கையில் இருந்து அகதிகளாக இரண்டு மாதக் கைக்குழந்தை உட்பட 8 பேர் தமிழகத்தை சென்றடைந்துள்ளனர்.
குறித்த, எட்டு பேரும் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக மூன்றாம் மணல் திட்டு பகுதியில் படகு செலுத்துனர்களினால் இறக்கிவிடப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் தமிழக கடலோர காவல்துறையினரால் 2 மாத கைக்குழந்தை உள்ளிட்ட 8 பேர் இன்று (21-08-2022) அதிகாலை மீட்கப்பட்டனர்.
மேலும், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்கள் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதிகளாக சென்றடைந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது