நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வெளியிட்ட கருத்துக்கு மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மற்றும் சபாநாயகர் மொஹமட் நஷீத் மறுப்பு தெரிவித்துள்ளார்.
உதவி மறுப்பு
ஹர்ஷ டி சில்வாவின் கருத்தை மறுக்கிறார் நஷீத்
இலங்கைக்கு உதவுமாறு மொஹமட் நஷீத் விடுத்த கோரிக்கையை சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் நிராகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தார்.
நஷீத், இதனை தன்னிடம் கூறியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
நஷீதின் கருத்து
ஹர்ஷ டி சில்வாவின் கருத்தை மறுக்கிறார் நஷீத்
இதனையடுத்து மொஹமட் நஷீத், ஹர்ஷவின் கருத்தை மறுத்து, “இலங்கைக்கு உதவுவதற்கு நாடுகள் தயாராக இல்லை என்று அவரை மேற்கோள் காட்டி ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானவை என்றும் பல நாடுகள் இலங்கைக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாகவும்” கருத்து வெளியிட்டுள்ளார்.