யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் நாம் செய்ய வேண்டிய விஷயத்தை செய்துகொண்டே போவோம், வெற்றி பெறுவோம் என்பதற்கு உதாரணமாக வலம் வருகிறார் இயக்குனர் அட்லீ.
தமிழில் 1 படம் இயக்கியதுடனே தளபதியை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்க அடுத்தடுத்து படங்கள் இயக்கினார். பின் மீண்டும் வேறொரு தமிழ் பட நடிகரை வைத்து படம் இயக்குவார் என்று பார்த்தால் அப்படியே பாலிவுட் பக்கம் சென்றார்.
ஹிந்தி சினிமாவையே தனது நடிப்பால் கட்டிப்போட்டு வைத்துள்ள ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி சாதித்து விட்டார் அட்லீ.
ஜவான் படத்தின் வெற்றியில் இருக்கும் அட்லீ குறித்து இப்போது புது தகவல் ஒன்று வலம் வருகிறது. அதுஎன்னவென்றால் பாலிவுட் பக்கம் சென்று படம் இயக்கிய அட்லீ இப்போது டோலிவுட் பக்கம் செல்ல இருக்கிறாராம்.
புஷ்பா படத்திற்காக சிறந்த நாயகனுக்காக தேசிய விருது வாங்கப்போகும் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து தான் அடுத்து படம் இயக்கப்போகிறாராம் அட்லீ. ஆனால் இதுகுறித்து இதுவரை எந்தஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.