இந்தியாவில் மைசூரு மாவட்ட துணை ஆணையர் ரோகிணி சிந்தூரி, பொது இடத்தில் பஞ்சர் ஆன தனது SUV காரின் டயரை யாருடைய உதவியும் இல்லமல் தானே மாற்ரம் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இருப்பினும், இந்த வீடியோ எங்கே படமாக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் இது ஒரு ஷாப்பிங் மாலின் வாகன நிறுத்துமிடம் போல் தெரிகிறது.
ரோகிணி சிந்தூரி ஒரு எளிமையான சுடிதார் உடையணிந்து, தனிப்பட்ட வேலைக்காக தனது வெள்ளை ஸ்கார்பியோ காரில் சென்றுள்ளார். சென்ற இடத்தில் அவனது கார் டயர் பஞ்சராகியுள்ளது.
அந்த நிலையில், அவரே ஜாக்கி மற்றும் ஸ்பேனரைப் பயன்படுத்தி ஸ்டெப்னி டயரை மாற்ரிக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் வந்த ஒரு அடையாளம் தெரியாத நபர் ‘மேடம், நீங்கள் டி.சி ரோஹினி சிந்தூரி தானே?’ எனக் கேட்டுள்ளார். ஆரம்பத்தில், அவள் பதிலளிக்கவில்லை. ஆனால், அந்த நபர் அவரை ‘மேடம்’ என்று பலமுறை அழைத்த பிறகு, சிரித்த முகத்துடன் திரும்பியுள்ளார் ரோகிணி சிந்தூரி.
அதிர்ச்சியான அந்த நபர் “மேடம் நீங்களா பஞ்சர் போடுகிறீர்களா?’ அதற்கும் அவர் அமைதியாக புன்னகைத்துள்ளார்.
பிளாட் டயரை மாற்றுவது அவ்வளவு எளிதானது அல்ல என்று வாகன ஓட்டிகளுக்குத் தெரியும். ஜாக்கி மூலம் வாகனத்தை தூக்குவது, சக்கரத்தின் போல்ட்டை அகற்றி புதிய டயரை மாற்றுவது சற்று கடினம். பெரும்பாலும் பெண்கள் இந்த வேலையை செய்வதில்லை. குறிப்பாக ஆண்களாக இருந்தாலுமே, பொது இடத்தில் ஒரு கலெக்டர் இந்த வேலையை செய்வார்களா என்பது சந்தேகம் தான்.
இந்த நிலையில் ஒரு பெண் மாவட்ட கலெக்டர் ரோஹினி சிந்தூரி அதைச் செய்துள்ளார் என்பது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கிறது. அவரது வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக நிலையில், அவருக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.