வெளிநாட்டு தொழில் வாய்ப்பு குறித்து தற்போதுள்ள சட்டங்களை நீக்கி, புதிய சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார (Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.
சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக செல்பவர்களின் பாதுகாப்பு முக்கியமானதாகும்.
எனவே வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்பப்படும் தொழிலாளர்களுக்கு உரிய தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் குறுகிய அரசியல் நோக்கங்களில் செயற்படுமிடத்து, நாட்டை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்ப முடியாது எனவும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.