பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட 64 கோடியே 77 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான 16 கிலோ 193 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு வந்த கொள்கலன் ஒன்றில் இருந்த போதைப்பொருளை கொழும்பு துறைமுக கட்டுப்பாட்டு பிரிவின் சுங்க அதிகாரிகள் குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த 15 ஆம் திகதி கராச்சியிலிருந்து “வைட் ஜூலிட்” (Wide Juliet) என்ற கப்பல் இந்தஹெரோயின் தொகையை குளிரூட்டப்பட்ட கொள்கலனில் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வந்துள்ளது.
கொழும்பு துறைமுக கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் கொள்கலனை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வந்த கொழும்பு இறக்குமதியாளர், உடனடியாக கொள்கலனை மீண்டும் பாகிஸ்தானின் கராச்சிக்கு திருப்பி விடுவதற்கு தயாராகியுள்ளார்.
எனினும் முந்திக்கொண்ட சுங்க அதிகாரிகள் அதிலுள்ள விசேட அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப் பொருளை கைப்பற்றியுள்ளனர்.
தற்போது, கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளை இறக்குமதி செய்த கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் மூவர் கொழும்பு துறைமுக கட்டுப்பாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.