நான்கு ஆண்டுகளாக பல்கேரியாவில் வாழ்ந்து வந்த பிரித்தானிய பெண் ஒருவர் திடீரென மாயமாகியுள்ளார். Tina Eyre (62) என்ற அந்த பெண் , 26 வயதேயான இளைஞர் ஒருவனுடன் வாழ்ந்துவந்துள்ளார்.
பிரித்தானியாவில் 17 ஆண்டுகளாக சட்டத்துறைச் செயலராக பணியாற்றிய பின்பல்கேரியாவுக்கு குடிபெயர்ந்த Tina, பல நாட்களாக வீட்டை விட்டு வெளியே வராததாலும், தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காததாலும், அவர் வாழ்ந்த பகுதியிலுள்ள தபால் நிலைய தலைவராகிய ஒரு பெண், அவரது சக பிரித்தானியர்களிடம் அவரை சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.
அதன்படி பிரித்தானியர்கள் சிலர் Tinaவின் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்கள். அங்கே Tina வாழ்ந்துவந்த வீட்டிலுள்ள தோட்டத்தில், அவரது காதலனான அந்த இளைஞர் குழி தோண்டிக்கொண்டிருந்திருக்கிறார்.
அவரிடம் Tinaவைக் குறித்து அவர்கள் விசாரிக்கும்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாக உளறியதுடன், பதில் கூற முடியாமல் அங்கிருந்து ஓட்டம் பிடித்திருக்கிறார்.
வந்தவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, அங்கே Tina இரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்திருக்கிறார்.
அவரை புதைக்கத்தான் அந்த இளைஞர் குழி தோண்டியிருக்கிறார் என்பது தெரியவரவே, உடனடியாக பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள் அந்த பிரித்தானியர்கள்.
அந்த இளைஞனைக் கைது செய்த பொலிசார், அவரை விசாரிக்கும்போது, பொறாமையால் Tinaவைக் கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார் அவர்.
Tinaவை அடித்தே கொன்ற அந்த இளைஞர், அதே மண்வெட்டியால்தான் அவரை புதைக்க குழி தோண்டியதாக பொலிசார் கருதுகிறார்கள். விசாரணை தொடர்கிறது.