இன்று பெரும்பாலான நபர்கள் தொப்பையை குறைப்பதில் மிகவும் சிரமம் எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு எளிய பானம் ஒன்றினை குறித்து இங்கு தெரிந்துகொள்வோம்.
உடல் எடையைக் குறைப்பதில் சீரக பானம் அதிக உதவி செய்கின்றது. தொப்பை ஏற்படுவதற்கு இன்றைய வாழ்க்கை முறை, உணவு பழக்கம் இவை தான் முக்கிய காரணமாக இருக்கின்றது. இடுப்பை சுற்று தேங்கியிருக்கும் கொழுப்பை கரைக்க பலரும் சிரமப்படும் நிலையில் எளிதாக குறைக்கும் டிப்ஸை இங்கு தெரிந்து கொள்வோம்.
செரிமானத்திற்கு உதவி செய்யும் சீரகத்தில் வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள், பாக்டீரியா எதிர்ப்பு திறன்கள் காணப்படகின்றது. இதனை உட்கொள்வதால் புரதம், நோய் எதிர்ப்பு சக்தி, இரத்த அணுக்கள் அதிகரிக்கின்றது.
ரத்தத்தினை சுத்தம் செய்வதுடன் நச்சு நீக்கியாகவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவி செய்கின்றது. சரும பொலிவு மற்றும் எடையை குறைக்கவும் உதவுகின்றது.
சிக்கலான ஊட்டச்சத்துகளின் திறம்பட செரிமானத்திற்கு உதவி செய்கின்றது. இதனால் வயிற்று போக்கு, மலச்சிக்கல், அஜீரணம் இவற்றிலிருந்து தப்பிக்கலாம்.
எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக சீரக தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம். அனைத்து வயிறு சம்பந்தமாக பிரச்சினையை நீக்குவதுடன், இரும்புச்சத்தும் அதிகம் கொண்டுள்ளது.
டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கும், சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளவும், குமட்டல், வாந்தி, வயிறு உப்புதல், மலச்சிக்கல் இவற்றிலிருந்து பாதுகாக்கனின்றது.

