காட்டு யானையொன்று வீட்டு முற்றம் ஒன்றில் உயிரிழந்தமை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..
அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர் ஏற்றம் பிரதேசத்தில் காட்டு யானையொன்று கடந்த புதன்கிழமை (25) உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.
குறித்த காட்டு யானை உட்பட சில யானைகள் அப்பகுதிகளில் நடமாடி திரிந்ததை அவதானித்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.
இவ்விடயம் தொடர்பில் தற்போது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொத்துவில் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் வருகை தந்த வண்ணம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.