வீட்டில் நீரூற்று வைத்திருப்பது வீட்டின் அழகை மேம்படுத்துவதோடு குடியிருப்பை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஒரு இனிமையான சூழலை உருவாக்குகிறது என்பதே நமக்கு தெரிந்த விடயம் ஆகும். நமக்கு தெரியாத வாஸ்து சாஸ்திரத்தை நாம் இங்கு பார்ப்போம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் முன் நீரூற்று காணப்படுமாயின் அது பணம், மகிழ்ச்சி மற்றும் அன்பின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
உங்கள் வீட்டில் அதைச் சுற்றிலும் வைத்திருப்பது உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் நேர்மறையையும் கொண்டு வரும்.
நீரூற்று வைக்கும் திசை
நீரூற்று வைப்பதற்கு சிறந்த இடம் வடக்கு திசையாகும். மேற்கு அல்லது தென்மேற்கு பகுதியை தேர்வு செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது ஏனெனில் இதனால் குடும்ப உறுப்பினர்களிடை யே பிரச்சினைகளை உண்டாக்கும்
படுக்கையறையில் நீரூற்று
படுக்கையறையில் நீரூற்று வைப்பது உறவுகளுக்கிடையே பிரச்சினைகளை கொண்டு வரும் எனவே அங்கு வைப்பதை தவீர்த்து கொள்ளுங்கள். படுக்கையறையில் நீர்நிலை ஓவியம் கூட வைக்கவேண்டாம்.
முன் கதவு நீரூற்று
வீட்டின் முன் கதவுக்கு முன் நீரூற்று வைப்பதால் அது உங்கள் வாழ்வின் செழிப்பை அதிகரிக்கும்.
தடையில்லாமல் ஓடும் நீரூற்று
தடையில்லாமல் ஓடும் நீரூற்றில் எந்தவொரு தேக்கமும் இல்லாமல் இருந்தால் வாழ்வில் எந்த தேக்கமும் முற்னேற்றத்தை தடுக்காது வழிவகுக்கும். எனவே நீரூற்றில் குப்பை மற்றும் பாசி இல்லாமல் வைத்திருப்பது வாழ்க்ழையை சந்தோசப்படுத்தும்.
எந்தவொரு தீய சக்தியும் வீட்டில் வருவதை தடுப்பதற்கு வீட்டில் முன் நீரூற்று இருப்பது மிக அவசியமாகும்.