விவசாயிகளுக்கு ஒரு மூடை இரசாயன உரத்தை 10,000 ரூபாவுக்கு வழங்க பிரதமரினால் நியமிக்கப்பட்ட குழு தீர்மானித்துள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் 65,000 மெட்ரிக் டன் உரத்தை இம்மாத இறுதிக்குள் இறக்குமதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக எரிபொருளை பெற்றுக்கொள்ள புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையுடன் 2022 ஆம் ஆண்டின் சிறுபோக பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனை, தடையின்றி முன்னெடுத்துச் செல்ல அவசியமான எரிபொருள் தொகையினை விவசாயிகளுக்கு வழங்க அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எச். ருவான்சந்திர தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது