தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திரா முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை ரெனிகுண்டாவின் திருப்பதி விமான நிலையத்தில் பொலிசார் தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒய்.எஸ்.ஆர்.சி மாநில அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரவித்து திங்கட்கிழமை சித்தூர் மற்றும் திருப்பதில் போராட்டம் நடத்த சந்திரபாபு காவல்துறையிடம் அனுமதி கோரியிருந்தார்.
எனினும், கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி சந்திரபாபுவிற்கு அனுமதி தர கால்வதுறை மறுத்துள்ளது.இந்நிலையில், இன்று திருப்பதி விமான நிலையத்தில் வந்திறங்கிய சந்திரபாபுவை ரெனிகுண்டா பொலிஸ் தடுத்தனர்.இதனையடுத்து, அவர் விமான நிலையத்திலே தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சந்திபாபுவிடம் பொலிசார் மண்டியிட்டு கெஞ்சிய காட்சிகள் இணைத்தில் வைரலாகியுள்ளது.