விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளர்கள் என்றால், மாகாபா, டிடி, பிரியங்கா, கோபிநாத் என பலரும் கூறுவார்கள். இதில் தற்போது விஜய் டிவியில் மிகவும் அதிக ரசிகர்களை கொண்டவர் தொகுப்பாளினி பிரியங்கா.
ஆம் தனது நகைச்சுவையால், சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டார்ட் மியூசிக் என இரு வெற்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இவர்களை தவிர்த்து தற்போது புதிதாக விஜய் டிவிக்கு தொகுப்பாளினி ஒருவர் வந்துள்ளார்.
அவர் வேறு யாருமில்லை, நம் பிக் பாஸ் அர்ச்சனா தான் அது. ஆம் முதலில் ஜீ தமிழில் தொகுப்பாளினியாக பணிபுரிந்த வந்த அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சி காரணமாக விஜய் டிவிக்கு வந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது காதலே காதலே எனும் புத்தம் புதிய காதல் நிகழ்ச்சி ஒன்று தொகுத்து வழங்க இருக்கிறார் தொகுப்பாளினி அர்ச்சனா. அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.