வீட்டிலுள்ள பொருட்களை வாஸ்துப்படி சரியான திசையில் வைக்க வேண்டும்.
ஏனெனில் வீட்டில் இருக்கும் பொருட்கள் வாஸ்துப்படி இருந்தால் தான், அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் நிரம்பியிருக்கும்.
அதன் விளைவாக வீட்டில் பணம் அதிகம் சேரும், வீட்டில் உள்ளோர் வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
இதுவரை உங்கள் வீட்டில் நீங்கள் வாஸ்து பார்த்து கலண்டரை வைத்ததில்லை என்றால், இந்த ஆண்டு உங்கள் வீட்டில் வாஸ்துப்படி வையுங்கள்.
இதனால் நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தை காண்பீர்கள். சரி, வாஸ்துப்படி கலண்டரை எந்த திசையில் வைக்க வேண்டும், எந்த திசையில் வைக்கக்கூடாது மற்றும் எந்த இடத்தில் கலண்டரை வைக்கக்கூடாது என்பதை இப்போது காண்போம்.
புத்தாண்டு அன்று வீட்டில் காலெண்டரை வைக்க சிறந்த திசை என்றால், அது மேற்கு திசை தான். ஏனெனில் மேற்கு ஓட்டத்தின் திசை என்று நம்பப்படுகிறது.
இந்த திசையில் காலெண்டரை வைக்கும் போது வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
ஒருவேளை உங்களால் மேற்கு திசையில் காலெண்டரை நிறுவ முடியாவிட்டால், வடக்கு திசையைப் பார்த்து வைக்கலாம்.
இந்த திசையானது குபேர திசை. ஆகவே இந்த திசையில் கலண்டரை நிறுவினால், வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.
எனவே வீட்டில் பணம் அதிகம் சேர வேண்டுமென்று நினைத்தால், வடக்கு திசையைப் பார்த்தவாறு காலெண்டரை வையுங்கள்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, காலெண்டரை எக்காரணம் கொண்டும் தெற்கு திசையைப் பார்த்தவாறு வைக்கக்கூடாது.
அப்படி வைத்தால், நஷ்டத்தை தான் சந்திக்க நேரிடும்.
மேலும் இந்த திசையில் கலண்டரை வைத்தால், நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும் மற்றும் நிறைய பண இழப்புக்களையும் சந்திக்கக்கூடும்.
கலண்டரை எப்போதும் கதவுக்கு பின்னால் வைக்கக்கூடாது.
அதேப் போல் ஜன்னலுக்கு அருகிலும் வைக்கக்கூடாது. வீட்டின் பிரதான கதவுக்கு அருகிலும் காலெண்டரை வைக்கக்கூடாது.
இது வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தைத் தடுக்கும்.
வாஸ்துப்படி, வீட்டில் நிறுவும் காலெண்டரானது காற்றில் பறந்தவாறு இருக்கக்கூடாது.
அப்படி மீண்டும் மீண்டும் பறந்தால், அது வீட்டில் இருப்போரின் முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தி, மோசமான விளைவை ஏற்படுத்தும்.