இந்துக்கள் தமது முன்னோகளுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வழிபடவேண்டிய நாள் அமாவாசை தினமாகும்.
எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் மூன்று மாதங்களில் வரும் அமாவாசை மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
அந்தவகையில் தை மாதம் வரும் அமாவாசையை ‘தை அமாவாசை’ என்றும், ஆடி மாதம் வரும் அமாவாசையை ‘ஆடி அமாவாசை’ என்றும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை ‘மகாளய அமாவாசை’ என்பனவே சிறப்பு வாய்ந்ததாக சொல்வா்.
அந்தவகையில் புரட்டாசி மாதம் 27 ஆம் திகதி (14.10.2023) சனிக்கிழமை அன்று மகாளய அமாவாசை’ வருகிறது.
அன்றைய தினம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வதன் மூலமும், பித்ருக்களுக்கு திதி கொடுப்பதன் மூலமும் , நம் வாழ்வில் முன்னேற்றங்களை வரவழைத்துக் கொள்ள இயலும்.
முன்னோர்களுக்கு திதி கொடுக்க வேண்டிய தேதியை மறந்தவர்கள், திதி கொடுக்க மறந்தவர்கள் மகாளய அமாவாசை தினத்தில் திதி கொடுத்தால் அதை முன்னோர்கள் மனதார ஏற்றுக்கொள்வர்கள் என்பது ஐதீகம்.
அறைக்குள் விளக்காக இருக்கும் முன்னோர்களை திருப்திப்படுத்த வழிபட வேண்டிய நாள் அமாவாசை ஆகும். அன்றைய நாளில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி திதி கொடுப்பதுடன், தானம் செய்வதும், காக்கைக்கு உணவிடுவதும் பல மடங்கு பலனை தரும்.
அதேசமயம் திதி கொடுத்தால் விதி மாறும் என்பது முன்னோர் வாக்கு.
அதற்கமைய மறைந்த நம் முன்னோர்கள் எமக்கு தெய்வங்களாக நின்று வழிகாட்டுகின்றார்கள் , மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடுவதால் நம் வாழ்வில் துன்பங்கள் நீங்கி வாழ்வு வளம் பெறும்.