நாம் எல்லோருக்கும் இருக்கக்கூடிய ஒரு பிரச்சனைதான் இது. சம்பளம் வந்த உடனேயே அந்தப் பணம் பஞ்சாக பறந்துவிடும். காரணம் சம்பளம் வருவதற்கு முன்பாகவே நாம் கடனை வாங்கி, நம் தேவைக்கு செலவு செய்து வைத்திருப்போம். சம்பளப் பணம் கடனுக்காகவே கரைந்து போய்விடும். மீண்டும் நம்முடைய தேவைகளுக்காக கடன் வாங்குவோம். இப்படியே நம்முடைய வாழ்க்கை கடன் வாங்குவதும், கொடுப்பதும் ஆக சென்று கொண்டிருக்கின்றது. சரி, இந்த கடன் தொல்லையில் இருந்து தப்பித்து, சம்பளப் பணத்தை சேமித்து நம்முடைய வாழ்க்கையை இனிமையாக எப்படி நடத்திச் செல்லலாம்.
இதற்கான ஒரு சுலபமான பரிகாரம் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது என்ன பரிகாரம் அதை எப்படி செய்யலாம் என்று நீங்களும் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மாத சம்பளத்தை ஒரு முறை இப்படி செய்து தான் பாருங்களேன். நல்லது நடந்தால் நமக்கு நிறைய லாபம். நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை தொடரலாம்.
2 வெற்றிலைகள், 2 கொட்டைப் பாக்குகள், 2 முந்திரி பருப்பு, உங்கள் வீட்டில் இருக்கும் வாசனை மிகுந்த ஏதாவது ஒரு பூ, அந்த பூ மஞ்சள் நிறத்தில் இருந்தால் சிறப்பானது. ஒரு சிறிய தட்டில் 2 வெற்றிலையை வைத்து விட்டு, அதன் மேல் 2 பாக்கு வைத்து, பாக்கு பக்கத்திலேயே இரண்டு முந்திரி பருப்புகளை வைத்துவிடுங்கள். இப்போது இந்த வெற்றிலையின் மேல் உங்களது சம்பளப் பணத்தையும் வைத்து, சம்பளப் பணத்தின் மேல் பூவை வைத்து குலதெய்வம், இஷ்ட தெய்வத்திடத்திடம் மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.
இந்த தாம்பூலமும் சம்பளமும் உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு 10 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். நீங்கள் பூஜை அறையை விட்டு வெளியே வந்துவிடுங்கள். கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் பூஜை அறைக்கு சென்று, சம்பள பணத்தை எடுத்து பட்டுவாடா செய்து கொள்ள வேண்டும். அதில் இருக்கும் முந்திரிப்பருப்பை கட்டாயம் குடும்பத்தலைவர் சாப்பிட்டுவிட வேண்டும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சம்பாதிப்பதாக இருந்தால் ஆளுக்கொரு முந்திரிப்பருப்பை சாப்பிட்டுக் கொள்ளலாம்.
இப்படி செய்தால் நிச்சயமாக உங்களுடைய சம்பளப் பணம் வீண் விரையம் ஆகாது. அந்தப் பணம் இரட்டிப்பாகி, சேமிப்பதற்கு பல நல்ல வழிகள் உங்களை தேடி வருவதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. சரி, சம்பளப் பணத்தை நாங்கள் முழுமையாக வீட்டிற்கு கொண்டு வரவே மாட்டோம். எப்போதெல்லாம் பணம் தேவைப் படுகிறதோ அப்போதெல்லாம் ஏ.டி.எம் மில் இருந்து தான் எடுப்போம் என்பவர்களுக்கு?
ஒரு 500 ரூபாய் பணத்தை வெற்றிலை பாக்கின் மீது வைத்து, சம்பளம் வந்த அன்றைய தினம் இந்த பரிகாரத்தை செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். நம்பிக்கையோடு தொடங்கிய எந்த ஒரு விஷயமும் தோற்றுப் போனதாக சரித்திரமே இல்லை. நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நிச்சயமாக நல்ல பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.