இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவில் திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
ரஜினி, கமல், சிவகார்த்தியேகன், சூர்யா, கார்த்தி போன்றவர்கள் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்கள்.
இந்நிலையில் தற்போது நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து தனது வாக்கை பதிவு செய்திருக்கிறார்.
விஜய் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தியது சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.