வாகன இறக்குமதி தொடர்பில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அத்தியாவசிய பொருட்களை மாத்திரம் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு இதுவரை அனுமதி வழங்கவில்லை என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் பல தரப்பினரும் முன்மொழிவுகளை முன்வைத்துள்ளனர் எவ்வாறாயினும், அத்தியாவசிய பொருட்களை மட்டும் இறக்குமதி செய்வதற்கு டொலர்களை பயன்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாகனங்களை டொலர்களில் திருப்பி அனுப்புவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் தாம் முன்வைத்த முன்மொழிவை பரிசீலிக்க முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர், டொலர் நெருக்கடி தீர்ந்த பின்னரே வாகனங்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்றார்.