வவுனியாவில் மேலும் நான்கு பேருக்கு நேற்று (14.03.2021) இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த வாரத்தில் இருந்து மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில்,
அவர்களுடன் தொடர்புடையவர்கள், ஆடைத் தொழிற்சாலையை சேர்ந்தோர் மற்றும் பல்வேறு பகுதிகளிலும் சுகாதார துறையினரால் பிசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதில் ஒரு தொகுதி முடிவுகள் நேற்று இரவு வெளியாகிய நிலையில், பூவரசன்குளம் பகுதியில் ஒருவருக்கும், வவுனியாவில் உள்ள மரக்காலையில் பணியாற்றும் இருவருக்கும், வவுனியாவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த ஒருவருக்கும் என நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.