நாட்டின் நெருக்கடி நிலையால் வரிசையில் நின்றாலும் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்கு மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு அதிகாரத்தை வழங்குவார்கள் என தாம் பூரண நம்பிக்கை கொண்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி இளைஞர் முன்னணியின் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
தற்போது நாடு எதிர்நோக்கும் அனைத்து நெருக்கடிகளுக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் மாத்திரமே தீர்வு காணப்படுவதாகவும் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
சஜித் பிரேமதாச மற்றும் அநுர திஸாநாயக்க வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினாலும் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் மீது நாட்டு மக்கள் பூரண நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கேற்ப மக்கள், பொதுஜன முன்னணிக்கு அதிகாரத்தை மீண்டும் வழங்க தயாராக இருப்பதாகவும் அளுத்கமகே குறிப்பிடுகின்றார்.
அதேவேளை மக்கள் வரிசையில் நிற்கும் அவல நிலையை அரசாங்கம் உணர்ந்து கொண்டுள்ளதால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு காண முடியும் எனவும் விவசாய அமைச்சர் மேலும் தெரிவித்தார்