அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் வயோதிபப் பெண் ஒருவர் தனக்குத் தானே தீயிட்டு தற்கொலை செய்து கொண்டு தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) நள்ளிரவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விநாயகபுரம் 3 பிரிவு காளிகோவில் வீதியைச் சேர்ந்த 76 வயதுடைய முத்துச்சாமி கருப்பாயி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிவப் பெண் சம்பவதினமான நேற்று நள்ளிரவு 12 மணியளவில் வீட்டின் அறையில் இருந்து வெளியேறி வீட்டின் முற்றத்தில் தற்கொலை செய்ய தனக்கு தானே மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்ததையடுத்து அவர் தீயில் எரிந்த நிலையில், உறவினர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோதும் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த வயோதிப பெண்ணுக்கு சிறுநீரகம் இரண்டும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு நோயினால் வேதனைகளை அனுபவித்து வந்துள்ளதாகவும் மனவிரக்தியின் காரணமாகவே அவர் தீயிட்டு தற்கொலை செய்துள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .
உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பின்னர் உறவினரிடம் ஒப்படைக்கபடும் என பொலிஸார் தெரிவித்தனர்.