9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் ஆராய விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்குமாறு, சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளது.
கடிதம் ஒன்றில் மூலம், அந்த ஒன்றியத்தின் உறுப்பினர்களால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரன உள்ளிட்ட 8 பேர் கையொப்பமிட்டு, குறித்த கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், மே 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து, இதுவரையில் ஆயிரத்து 708 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் 900 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 751 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹாலர் தல்துவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.