பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 16 வயது சிறுமியை, குடும்ப உறுப்பினர்களே கிராம மக்களுடன் சேர்ந்து அடித்து ஓடவிட்டு அசிங்கப்படுத்திய சம்பவம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலமான மத்திய பிரதேசத்தில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் அலிராஜ்பூர் மாவட்டத்தில் இந்த பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதையடுத்து இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அறிந்த கிராம மக்கள், அந்த இளைஞனை அடித்து இழுத்து வந்துள்ளார். அதேபோல், பாதிக்கப்பட்ட சிறுமியும் தண்டனைக்கு உரியவர் என, அவரையும் கைகளைக் கட்டி அடித்து எல்லோரும் பார்க்க சாலையில் நடக்கவிட்டு மானபங்கம் செய்துள்ளனர்.
இதில் கொடுமை என்னவென்றால், சிறுமியின் குடும்பத்தினர் தான் கிராம மக்களுடன் சேர்ந்நது இந்த பாதக செயலில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸ் சிறுமியை காப்பாற்றி மருத்துவ உதவிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
துஷ்பிரயோகம் செய்த 21 இளைஞர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் (IPC) மற்றும் போக்ஸோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.