இன்றைய தினமும் முடிந்த வரையில் எரிபொருள் விநியோகத்தை மேற்கொள்வதாக லங்கா I.O.C எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை முனையத்தில் இருந்து நாடு முழுவதும் எரிபொருள் விநியோகிக்கப்படுகிறது.
இருப்பினும், 80 தாங்கி ஊர்திகளே இந்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் கோசல விதான ஆராச்சி தெரிவித்துள்ளார்.
இதனூடாக நாட்டு தேவையான எரிபொருளில் 15 சதவீதத்தை மாத்திரமே பூர்த்தி செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை நாடு முழுவதும் உள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் இரவு பகலாக வரிசையில் காத்திருக்கின்றனர்.