பொதுவாக ராசிபலன்கள் கிரக மாற்றங்கள் அடிப்படையில் கணிக்கப்படுகின்றன.
ராகு எப்போதும் நிழல் கிரகமாக பார்க்கப்படுகின்றது.
ஒருவரின் ராசிக்கு ராகு வருவது அசுபமாக பார்க்கிறார்கள்.
இதன்படி, அடுத்த எட்டு மாதங்களுக்கு ராகு உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். அத்துடன் மீன ராசியிலும் சஞ்சாரிக்கிறார்.
அந்த வகையில், எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட பலன்களை அடையப் போகிறார்கள் என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. துலாம்
நிழல் கிரகமான ராகு பெயர்ச்சியால் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக வேலையில் பதவி உயர்வு இல்லை என கவலைப்படுபவர்களுக்கு இந்த காலப்பகுதியில் நன்மை நடக்கும்.
வெளியூர் பயணம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அத்துடன் குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். திருமணமான தம்பதிகளிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த காலப்பகுதியில் நல்லது நடக்கும்.
2. மகரம்
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு திருமண வாழ்வில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். நிதி நிலையில் மாற்றம் ஏற்படும். நீங்களே எதிர்பார்க்காத வண்ணம் வாழ்க்கையே தலைகீழாக மாற வாய்ப்பு உள்ளது. வரப்போகிற 8 மாதங்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும்.
3. கும்பம்
ராகு பெயர்ச்சியால் கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு நல்ல மாற்றம் உண்டாகும். இதுவரையில் இருந்த செலவுகள் அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் வரும். புதிய வேலைகள் உங்களுக்கு சாதகமான அமையும். இதனால் வருமானம் அதிகமாக இருக்கும். குடும்ப கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும். கூடிய விரைவில் பணக்காரர்கள் ஆவார்கள்.