மட்டக்களப்பில் இளைஞர் ஒருவர் ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை இந்த சம்பவம் மட்டக்களப்பு கருவப்பங்கேணி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி குறித்த இளைஞர் உயிரிழந்ததாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.
சம்பவத்தில் மட்டக்களப்பு புன்னைச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய விக்கினேஸ்வரராஜா சதூசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கருவப்பங்கேணி பிரதேசத்தில் உறவினர் ஒருவரின் மரணவீட்டிற்கு சென்ற திரும்பிய நிலையில் இந்த அனர்தம் நிகழ்ந்துள்ளது.
குறித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.