மல்வத்து அஸ்கிரி மகா நா தேரர்களிடம் விசேட தலதா கண்காட்சியை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அது தொடர்பான விசேட கடிதம் நேற்று (17) பிற்பகல் மல்வத்து அஸ்கிரி பீடாதிபதிகள் மற்றும் தலதா மாளிகை தியவதன நிலமே பிரதீப் நிலங்க தேலவிடம் கையளிக்கப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டார்.
இதன்படி ஜனாதிபதியின் கோரிக்கை தொடர்பில் எதிர்காலத்தில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்