யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
அதனால் தற்போது இரண்டு கோவிட்-19 சிகிச்சை விடுதிகள் காணப்படும் நிலையில் மேதிகமாக மூன்றாவது விடுதியில் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது;
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக இரண்டு விடுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அந்த விடுதிகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதனால் 10 படுக்கைகளைக் கொண்ட புதிய விடுதி அவசர சிகிச்சை பிரிவுடன் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும்- என்றார்