யாழ்.நாவற்குழி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தொடர்ச்சியாக பொருட்களை கொள்ளையடித்துவந்த 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்கள் கொள்ளையடித்த பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.
ஹனிமூன் ஹோட்டலுக்குள் புகுந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த இலத்திரனியல் பொருட்கள் மற்றும் நிலத்திற்கு பதிக்கப்படும் மாபிள்கள் என பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் நாவற்குழி – புதிய குடியிருப்பு பகுதியில் மறைத்துவைக்கப்பட்டுள்ளதாக இளைஞர்கள் சிலருக்கு தகவல் கிடைத்த நிலையில் உரிமையாளர் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று முற்றுகையிட்ட பொலிஸார் 6 பேர் கொண்ட கொள்ளை கும்பலை கைது செய்ததுடன் பொருட்களையும் மீட்டுள்ளனர்.