யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் நேற்று மாலை தற்கொலைக்கு முயற்சித்த மாணவி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி இந்து கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதைகளின் பின் உறவினர் களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்நிலையில், தற்கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.