யாழ். நல்லூர் கோவில் வீதியில் கொழும்புத்துறையிலிருந்து திருநெல்வேலி சந்தைக்கு மரக்கறி வாங்கச் சென்ற 75 வயது முதியவர் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த வேளை மயக்கமடைந்த நிலையில் நிலத்தில் விழுந்து உயிரிழந்தார்.
கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மயங்கி விழுந்து மரணமானார்.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் மரக்கறி கடை நடத்துபவர் என்றும் இன்று காலை வீட்டிலிருந்து மரக்கறி வாங்க திருநெல்வேலி பொதுச் சந்தைக்கு சைக்கிளில் சென்றதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இவரது மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.