யாழ்ப்பாண பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குள் மர்ம நபர்கள் சிலர் புகுந்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் (01-05-2024) அதிகாலை இருபாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சீற்றால் கூரையிடப்பட்டிந்த வீட்டில் ஓட்டைப் பிரிந்து 3 பேரைக் கொண்ட கும்பல் கீழே இறங்கி மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
இதன்போது வீட்டிலிருந்த 3 பவுண் தங்க நகைகள், சுமார் 25 ஆயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
வீட்டின் ஓட்டைப் பிரித்து உள்நுழைந்த ஒன்று கொள்ளையில் ஈடுபட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
யாழில் அண்மைக் காலமாக தனிமையில் இருக்கும் வயதானவர்களையும் பெண்களையும் கொள்ளையர்கள் குறி வைத்து வரும் சம்பவம் அதிகரித்து வருகின்றன.