யாழ். மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியிலும் யூன் மாத ஆரம்பத்திலும் கொரோனா நோய்க்கு எதிரான சினோபார்ம் முதலாம் கட்ட தடுப்பூசியேற்றும் பணிகள் இடம்பெற்றன.
இரண்டாம் கட்ட தடுப்பூசியேற்றும் பணிகள் யாழ். மாவட்டத்தில் கடந்த யூன் 28 ஆம் திகதி முதல் இடம்பெற்று வருகின்றன.
கடந்த 28 ஆம் திகதி 10 ஆயிரத்து 110 பேருக்கும், 29 ஆம் திகதி 13 ஆயிரத்து 182 பேருக்கும், 29 ஆம் திகதி 10ஆயிரத்து 90 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளதுமொத்தமாக கடந்த மூன்று நாட்களிலும் 33 ஆயிரத்து 382 பேர் யாழ். மாவட்டத்தில் 2 ஆவது டோஸ் தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளனர்.
தொடர்ந்து யூலை 01 ஆம் 02 ஆம் திகதிகளிலும் சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒழுங்கு செய்யப்பட்ட நிலையங்களில் தடுப்பூசி வழங்கும் பணிகள் இடம்பெறும்
இந்த ஐந்து நாட்களிலும் இரண்டாவது தடுப்பூசியினை பெற தவறியவர்களுக்கு எதிர்வரும் யூலை 03 ஆம் திகதி சனிக்கிழமை அந்தந்த பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் காலை 8.00 மணி முதல் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.
தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி யாழ். போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை ஆதார வைத்திய சாலைகளிலும் வழங்கப்பட்டிருந்தது.
இவர்களுக்கான 2 ஆவது தடுப்பூசி எதிர்வரும் யூலை 03ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் இதே வைத்தியசாலைகளில் வழங்கப்படும்.
எனவே தவறாது குறிக்கப்பட்ட இந்த தினத்தில் சமூகமளித்து உங்களுக்கான 2 ஆவது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளளாம் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்