யாழ்.கொடிகாமம் கெற்பேலி பகுதியில் இன்று மாலை வாள்வெட்டு குழு வீடொன்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று மாலை வாள்களுடன் புகுந்த வன்முறை கும்பல் வீட்டின் மீதும், தகர வேலிகள் மீதும் வாளால் வெட்டியுள்ளது.
இதனையடுத்து வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்ட நிலையில் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது. சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. என கூறப்படுகிறது.