யாழ்ப்பாண பல்கழைக்கலகத்தில் உயிரிழந்த மகனின் பட்டப்படிப்புச் சான்றிதழை கண்ணீருடன் தாய் ஒருவர் பெற்றுக்கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் (20-07-2023) இடம்பெற்றது.
இந்த பட்டமளிப்பு விழாவில் மதவாச்சியைச் சேர்ந்த தாயொருவர் இவ்வாறு தனது மகனின் பட்டத்தை பெற்றுள்ளார்.
மேலும், அவர் யாழ்.பல்கலைக்கழகத்துடன் இணைந்த வவுனியா வளாகத்தில் கல்வி பயின்ற திஸாநாயக்க முதியன்சலாகே ஹசான் சாகர திசாநாயக்க என்ற மாணவராவார்.
மதவாச்சி பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட ஹசான் சாகர திஸாநாயக்க அண்மையில் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் மாணவன் ஹசான் சாகர திஸாநாயக்கவின் பட்டமளிப்பு நிகழ்வு உணர்வுபூர்வமான நிகழ்வாக அமைந்ததுடன், பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் சிறுவர்களும் இருக்கையில் இருந்து எழுந்து ஹசானை நினைவு கூர்ந்தனர்.