யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஒரே குடும்ப பின்னணியை சேர்ந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தொிவித்துள்ளனர்.
முன்னதாக தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் தொடர்புபட்ட நிலையில் , தும்பளை கணக்கிலாவத்தை பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒரே குடும்ப பின்னணி கொண்ட 5 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இவ்வாறு தனிமைப்படுத்தப் பட்டிருந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் நேற்றைய தினம் பரிசோதனைக்கு உட்படுத்தபடுத்தப்பட்டதில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தொற்று உறுதியானவர்கள் கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.இதேவேளை குறித்த தொற்றாளர்களது குடியிருப்புக்கு அண்மையாக வசிப்பவர்கள் சிலருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.